96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எரிமலையாய் பொங்கி, கோபியை அடிக்க பாய்ந்த செழியன்.! நடந்தது என்ன?? சூடுபறக்கும் பாக்கியலட்சுமி வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் கொண்டு பெரும் அல்லல் பட்டு வருகிறார்.
தற்போது தொடரில் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர். கோபியின் அம்மா ராதிகாவை திட்டிக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் பாக்கியா பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரது அம்மாவை பார்த்துள்ளார். மேலும் அங்கு பழனிசாமியிடம் பேசி சிரித்துகொண்டு இருந்துள்ளார். அதனை வழியில் சென்ற கோபி பார்த்துவிட்டு புலம்புகிறார்.
இந்த நிலையில் அவர் வீட்டிற்கு வந்ததும் ராதிகாவிற்கு ஆதரவாக குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பும் பாக்கியாவை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதனை கேட்டு செழியனும், எழிலும் எரிமலையாய் பொங்கியெழுந்து கோபியை அடிக்க வந்துள்ளனர். இதனை கண்டு ராதிகா பயந்து போய் நின்றுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இனி சீரியல் சூடுபிடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.