96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட.. பழனிச்சாமியை பெண் பார்க்க வீட்டிற்கு அழைத்த பாக்கியா! அதிர்ச்சியில் ஆடிபோன கோபி! என்னய்யா நடக்குது?
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகள் மத்தியில் இந்த தொடர் பெருமளவில் பிரபலமாகியுள்ளது. டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பாக்கியலட்சுமி தொடரில் மனைவி பாக்கியாவை வேண்டாம் என விவாகரத்து செய்துவிட்டு, கோபி முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் ராதிகாவிற்கும், கோபியின் அம்மாவிற்கும் இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டு தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்லும்போது கிடைத்த நண்பரான பழனிச்சாமிக்கு போன் செய்து தனது உறவுக்கார பெண் வந்துள்ளதாகவும், அவரை நீங்கள் பெண் பார்க்க வரவேண்டும் எனவும் அழைக்கிறார். இதனை அரைகுறையாக கேட்ட கோபி பாக்கியா அவரைதான் பெண்பார்க்க வர சொல்கிறார் என நினைத்துக் கொண்டு புலம்புகிறார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.