"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே.! என்ன செய்யபோகிறார் பாக்கியா!! எதிர்பார்ப்பை எகிற வைத்த பரபரப்பு ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளை பெருமளவில் கவர்ந்த இத்தொடரில் குடும்பம் மட்டுமே உலகம் என வாழ்ந்து வந்த பாக்கியலட்சுமி தன் கணவர் கோபி தனக்கு தெரியாமல் அவரது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்து, துரோகம் செய்ததை அறிந்து தைரியமாக கோபியை விவாகரத்து செய்கிறார்.
பின் தனியாளாக குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் அவர் தன்னம்பிக்கையோடு சமையல் தொழிலில் புதிய முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு சவாலாக மினி ஹால் ஒன்றில் சமைப்பதற்கு புதிய ஆர்டர் கொடுக்கப்படுகிறது.
அந்த ஆர்டர் அவரது கணவர் கோபிக்கும், ராதிகாவுக்கும் நடைபெறும் திருமணத்தில் சமைப்பதற்காக கிடைத்துள்ளது. அது தெரியாமலேயே பாக்கியமும் ஒத்துக்கொள்ள அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பு கூடியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.