96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இனிதான் ஆட்டம் ஆரம்பம்! பழனிச்சாமி வார்த்தையால் வயிறெரியும் கோபி.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். பின் ராதிகாவுடன் தனது வீட்டிற்கு எதிரேயே வந்து குடியேறுகிறார்.
இந்த நிலையில் பாக்கியா கேட்டரிங் பிசினஸ் தொடங்கி கோபிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அடுத்தடுத்ததாக பெருமளவில் முன்னேறி வருகிறார். இதற்கிடையே தொடரில் நடிகர் ரஞ்சித் பழனிச்சாமி என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள செல்லும் இடத்தில் பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பாக்யாவின் புதிய கேன்டீன் திறப்பு விழாவிற்கு ரஞ்சித் வருகை தருகிறார். அவர்
பாக்கியாவை நீங்கள் ரொம்ப லட்சணமா அழகாக இருக்கீங்க.. 30 வயது இருக்குமா? ரொம்ப இளமையா இருக்கீங்க என கூறுகிறார். இதனை அங்கு எதார்த்தமாக சென்ற கோபி கேட்டு ஷாக்கில் பெருமூச்சு விடுகிறார்.
தொடர்ந்து பாட்டி இவர்களெல்லாம் யார்? என கேட்க இனியா, அம்மா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் செல்கிறார். அங்குள்ளவர்கள் என கூறி பாக்கியாவை வசமாக மாட்டிவிடுகிறார். இதனால் பாட்டி கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.