பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. பாண்டியன் ஸ்டோர் குமரனுக்கு இப்படியொரு பிரச்சினையா? யாரும் நம்பாதீங்க.. அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் குமரன்.
இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் பாண்டியன் ஸ்டார் தொடர் மூலமே குமரன் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை பெற்றார். சமூகவலைத்தள பக்கத்தில் பிசியாக இருக்கும் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது பெயரில் அதிகமான போலியான ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் நான் அனுப்பியது இல்லை. அதனை யாரும் நம்ப வேணாம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தான் ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இல்லை எனவும், போலியான சமூகவலைதள பக்கங்கள் மீது புகாரளித்திருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.