#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையா.. வெளியான பரபரப்பு வீடியோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ் 2" தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ரெஹானா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார்.
மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ள "மீனாட்சிப் பொண்ணுங்க" தொலைக்காட்சித் தொடரிலும் ரெஹானா நடித்து வருகிறார். இவர் சின்னத் திரையில் நடிக்க வருவதற்கு முன்பாக செவிலியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரெஹானா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, "நான் செவிலியராக பணிபுரிந்தபோது, எப்போதும் பேருந்தில் தான் செல்வேன். அப்படி ஒருமுறை செல்லும்போது, பின்னால் நின்ற ஒருவர் என்னைத் தகாத முறையில் தொட்டார்.
நான் அவரிடம் இருந்து விலகிச் சென்றபோதும், விடாமல் தொல்லை செய்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து 'இந்தப் பக்கமும் தடவிக்கொள்' என்று கத்திவிட்டேன். அப்போதும் எல்லோரும் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்கள். யாரும் அந்த நபரை தட்டிக் கேட்கவில்லை" என்று கூறியுள்ளார்.