கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு என்ன ஆச்சு... வெளியான வீடியோவால் சோகத்தில் ரசிகர்கள்!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீனா என்கிற ஹேமா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் ஹேமாவை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது.
இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் தான் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மீனாவின் கதாபாத்திரத்திற்காகவே சிலர் சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஹேமாவிற்கு திடீரென ஆபரேஷன் நடந்துள்ளது. அந்த ஆபரேஷன் குறைத்து ஹேமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கழுத்து பகுதிக்கு கீழான பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஒன்று இருந்தது. இதைப் பற்றி டாக்டரிடம் செக் செய்த பின்னர் இது கேன்சர் கட்டியாக மாறிவிடுமோ என்ற பயத்தில் ஆபரேஷன் செய்ததாக கூறியுள்ளார்.