வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
அச்சச்சோ.. நிறைவு பெறுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர்?.. சின்னத்திரை ரசிகர்கள் பெரும் சோகம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில், பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பை தக்க வைத்துள்ள திரைப்படம் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகளின் பாசப்பிணைப்பை வைத்து, அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனை மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் தொடர்பான காட்சிகள் மக்களின் வாழ்வியலோடு இணைந்ததால் அவை இன்று வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தொடர் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால், தமிழில் இன்று வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தம்பிகள் அனைவரும் வீட்டில் இருந்து தனித்தனியே வெளியேறிவிட்டனர்.
அடுத்தடுத்த மனக்கசப்பு காரணமாக மூர்த்தியும் விரக்தியில் செய்வதறியாது கோபத்திலேயே சுற்றி வருகிறார். இதனால் இவர்கள் மீண்டும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
அதேபோல, அண்ணன்-தம்பிகள் அனைவரும் மீண்டும் இணையும் நாளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூன் மாதத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.