மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது.! காலேஜ் படிக்கும்போது எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா!! வைரல் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பிகளின் பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் தற்போது கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
சண்டை போட்டுக்கொண்டு அண்ணன் தம்பிகள் தனித்தனியே பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். தற்போது மீண்டும் அனைவரும் சேருவது போல கதை நகர்கிறது. இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ஹேமா. சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர் பின்னர் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரையில் சில தொடர்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தொடர் இவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையச் செய்தது. இந்த நிலையில் தற்போது மீனா கல்லூரி படிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.