பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
Pandian Stores: கூட்டுக்குடும்பத்தில் கண்ணனின் விளையாட்டுத்தனத்தால் வந்த வினை.. முறிந்தது மூர்த்தி - ஜீவா உறவு; பரபரப்பு ப்ரோமோ.!
அண்ணன் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என வெகுளியாக இருந்த தம்பிக்கு குடும்பத்தினர் செய்த சுயநல நடவடிக்கையால் குடும்பம் பிரிந்தது.
விஜய் தொலைக்காட்சியில் அண்ணன்-தம்பிகளின் பாசபந்தத்தை உணர்த்தி, கூட்டுக்குடும்ப வாழ்வியலை மீண்டும் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் மூர்த்தி மற்றும் அவரின் சகோதரர்கள் ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோர் சந்திக்கும் பிரச்சனைகளும், அதனை வெற்றியாக எதிர்கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்கும் நிகழ்வுகளும் நடந்தன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே கூட்டுக்குடும்பத்தில் பல சர்ச்சைகள் நடந்தன. தனியான வருமானம் பார்க்கும் கண்ணன் விளையாட்டுத்தனமாக ஜீவாவை ஏளனம் பேச, தனது கையில் 10 ரூபாய் கூட இல்லாமல் இருக்கிறோமே என அவரும் பல நிலைகளில் வருத்தப்பட்டார்.
இந்த விஷயங்கள் அவரின் மனதில் ஆறாத ரணமாய் ஏறிவிட, இறுதியாக முன்பு கண்ணன், கதிர் வீட்டை விட்டு வெளியேறியதை போல் ஜீவாவும் அங்கிருந்து வெளியேறி செல்ல சூழ்நிலைகள் வருகின்றன.
அந்த வகையில், நடப்பு வாரத்தில் கண்ணனின் விளையாட்டுத்தனத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து ஜீவா பிரியவிருக்கிறார். இந்த ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவை பல தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.