மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Pandian Stores Promo: ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு செய்து இறுதி ஆசையை நிறைவேற்றும் தனம்; நடக்கப்போவது என்ன?..!
விஜய் தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை அடிப்படையாக கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் தற்போது தனத்திற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட, அவர் தான் இறந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் தனது இறுதி ஆசைகளை நிறைவேற்றி கொண்டு வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது தனம் தான் ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அழகுபார்க்க வேண்டும் என ஆசைப்பட, அந்த ஆசை நிறைவேறுகிறது. இதற்கிடையில், மீனாவிடம் அவர் சிகிச்சைக்கு இன்னும் 7 நாட்கள் இருப்பதால், அது பற்றி யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என சத்தியமும் வாங்கிவிடுகிறார்.