மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டைவிட்டு எப்போ போவிங்க?.. மீனாவின் அப்பாவால் வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. அடுத்தடுத்து நடக்கப்போகும் பரபரப்பு சம்பவம்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொடரில் கடந்த வாரம் வரை கதிர் - முல்லை ஜோடி மீண்டும் வீட்டிற்கு வந்தது.
ஆனால், அவர்களை அன்று வசைபாடிய கூட்டத்தின் பேச்சுக்களை கண்டித்து பதில் தெரிவிக்கும் வகையில் கண்ணன் தனது அண்ணன் ஜீவாவின் மாமனாரை வீட்டிற்கு வரவழைத்து குடும்பத்தினரை விட்டு பதில் உரைக்க வைத்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன், எனது வீட்டில் உங்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வியை எழுப்பியதால், குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறி கதிர்-முல்லை வசித்து வந்த வாடகை வீட்டிற்கு ஒன்றாக குடிபெயருகின்றனர். இதனால் இந்த வாரம் பல அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வைரலாகி வருகிறது.