மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் வீட்டிலுமா?? அதுவும் யாருக்கு பார்த்தீர்களா! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனோ பரவல் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குமரன். இவரது அப்பாவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் குமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் அவரை கவனித்துக் கொண்டு, மீண்டு வர உதவி செய்து கொண்டிருக்கிறேன். நான் விரைவில் உங்களை சந்திக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் குமரன் சிலநாட்களுக்கு வரமாட்டாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வியெழும்பி வருகிறது.