மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. மறுபடியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஏற்பட்ட மாற்றம்! ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் கடைக்குட்டி பையனாக, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணவிக்ரம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடந்த சில நாட்களாக கண்ணன் குடும்பத்திற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்வது, குடும்பத்தில் விரிசல் ஏற்படுவது என அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டுள்ளது. கண்ணன் திருமணம் செய்து கொள்ளும் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்கிறார். இதுகுறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும்