மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குரூப் 1 வினாத்தாளில் பரியேறும் பெருமாள் தொடர்பான கேள்வி.! இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 66 காலிபணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2.57 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் "பரியேறும் பெருமாள்" திரைப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்வியில், “தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்” என கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி.
— Mari Selvaraj (@mari_selvaraj) January 3, 2021
யாவருக்கும் நன்றி.@beemji anna 💙@officialneelam @Music_Santhosh @am_kathir @anandhiactress @Sridhar_DOP @EditorSelva @pariyankaruppi #pariyerumperumal pic.twitter.com/luUybPbAHI
இதையடுத்து அந்த தேர்வு வினாத்தாள் இணையத்தில் வைரலான நிலையில் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.