பார்க்கிங் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; நினைவை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்.!



Parking Movie Completed 1 Year After Release 

 

ராம் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா, ராம ராஜேந்திரா, இளவரசு உட்பட பலர் நடிக்க, கடந்த 1 டிசம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் பார்க்கிங். பேஷன் ஸ்டுடியோஸ் - சோல்ஜர்ஸ் கம்பெனி தயாரிப்பில், சாம் சி.எஸ் இசையில் படம் உருவாகி இருந்தது. 

மிகப்பெரிய வெற்றிப்படம்

கடந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்ற பார்க்கிங் திரைப்படம், சென்னை போன்ற பெருநகரில் பார்க்கிங் தொடர்பாக ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டு, க்ரைம்-தில்லர் பாணியில் எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடையாளமாக இயக்குனருக்கு தங்க மோதிரமும் பரிசு வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?

நினைவை பகிர்ந்த நடிகர்

ஹாட்ஸ்டார் செயலியில் படம் உள்ளது. படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக, ஆஸ்கர் அகாடமி படத்தின் கதையை நூலகத்தில் வைப்பதாக தெரிவித்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன் இந்நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணியிடம் சவால் விட்ட செந்தில், சாதித்து காட்டிய கவுண்டமணி.. என்ன நடந்தது.!?