ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்'; ரிலீஸ் எப்போ?? மிரட்டலான போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அதைத்தொடர்ந்து அவர் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது பார்க்கிங் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மேலும் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பார்க்கிங் படத்தில் ஹீரோயினாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ் பாஸ்கர்,ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் டிசம்பர் 1ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.