அப்படிப்போடு.. பார்க்கிங் படத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்; ஆஸ்கர் நூலகத்தில் ஒதுக்கப்பட்ட இடம்.!
கடந்த 1 டிசம்பர் 2023 அன்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா, ராம ராஜேந்திரா, இளவரசு உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பார்க்கிங். இப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் - சோல்ஜர்ஸ் கம்பெனி தயாரிப்பில், சாம் சி.எஸ் இசையில் உருவாகி இருந்தது.
மனதை வென்ற திரைப்படம்
படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடியது.இதனால் படத்தின் இயக்குனருக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் வெற்றி விழாவின் போது தங்க மோதிரத்தையும் பரிசளித்து இருந்தார். படம் ஹாட்ஸ்டார் செயலியிலும் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கியூட் லுக்கில் அசத்தும் சிவகார்த்திகேயன்; வைரல் கிளிக்ஸ் இதோ.!
ஆஸ்கர் நூலகத்தில் திரைக்கதை
இந்நிலையில், பார்க்கிங் திரைப்படத்திற்கு ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையை தனது நூலகத்தில் வைக்க ஆஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், "நல்ல கதை அதற்கான இடத்தை கட்டாயம் தேடிப்போகும்" என தெரிவித்துள்ளார். இப்படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது
இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!