96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என் பொறாமையான வாழ்த்துக்கள்.. தன்னோட ஸ்டைலில் அசத்தலாக நியூ இயர் வாழ்த்து கூறிய பார்த்திபன்! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு அனைவரையும் கவர்ந்து பெரும் பிரபலமாக இருப்பவர் நடிகர் பார்த்திபன். அவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அதுவும் வடிவேலுவுடன் இணைந்து அவர் செய்யும் குண்டக்க மண்டக்க காமெடிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
இன்று புத்தாண்டு துவங்கிய நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், கடந்த ஆண்டுகளை கலாய்க்கும் வகையிலும் வடிவேலுவின் காமெடியை வைத்து நிறைய மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதனை குறிப்பிட்டு, பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
Hhaappppyy 22சிரிப்பின் சிறப்பு நோயற்ற வாழ்வு மகிழ்விப்பதில் மாமன்னன் mr வடிவேலுக்கு என் உட்பட நம் சார்பில் நன்றி இதுபோல் அர்த்த memes தயாரிக்கும் குறு(ம்பு)நில மன்னர்களுக்கும் பொறாமையான வாழ்த்துகள்.20/22 வயதில் எவ்வளவு இளமையாகவும்,இருப்போமோ அப்படி எல்லா வயதிலும் வாழ வாழ்த்துகள் pic.twitter.com/h9Rl7geWfF
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 31, 2021
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’Hhaappppyy 22 சிரிப்பின் சிறப்பு நோயற்ற வாழ்வு மகிழ்விப்பதில் மாமன்னன் mr வடிவேலுக்கு என் உட்பட நம் சார்பில் நன்றி இதுபோல் அர்த்த memes தயாரிக்கும் குறு(ம்பு)நில மன்னர்களுக்கும் பொறாமையான வாழ்த்துகள். 20/22 வயதில் எவ்வளவு இளமையாகவும், இருப்போமோ அப்படி எல்லா வயதிலும் வாழ வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு லைக்ஸ்குகள் குவிந்து வருகிறது.