திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொண்டாட ரெடியா.! பத்து தல குறித்து வெளிவந்த சூப்பரான தகவல்.! உற்சாக எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை, அதிக பருமன் என பல சர்ச்சையில் சிக்கிய சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கெத்தாக ரீ என்ட்ரி கொடுத்தார். மாநாடு திரைப்படம் செம ஹிட்டானது.
இந்நிலையில் சிம்பு அடுத்தததாக பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் உருவான இத்திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு வருகிற 18ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இசைவெளியீட்டு விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சில பாடல்களை பாட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த பட குழுவினர் முடிவெடுத்துள்ளனராம்.