மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்புவை ஒதுக்குகிறதா பத்து தல படக்குழு... ரசிகர்கள் கலக்கம்..!?
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் 'பத்து தல'. ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்தத் திரைப்படம் 'முஃப்தி' என்ற கன்னட பிளாக்பஸ்டர் படத்தை தழுவி ரீமேக் செய்யப்பட்டதாகும்.
பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், டிஜே அருணாச்சலம், கௌதம் மேனன் என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இதன்படி, பத்து தல படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதமே முடிந்து, மார்ச் 30ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இது போன்ற நிலையில் படத்தின் புரோமோ பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. இதில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. சிம்புவை பத்து தல படக்குழு ஒதுக்குகிறது என்று ரசிகர்களிடையே பேச்சு ஏற்பட்டது.
இதுகுறித்து பத்து தல படத்தின் இயக்குனர் கிருஷ்ணா விளக்கம் அளித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்பே முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் எடுத்த புரோமோ பாடல் படபிடிப்பு அன்று சிம்பு வெளிநாட்டில் இருந்தார். வர முடியாத காரணத்தால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.