மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கோ ஷாக் மகிழ்ச்சியில் திகைத்து நின்ற பவித்ரா ஜனனி.. விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ..!
சீரியல் நடிகை பவித்ரா ஜனனி முதலில் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது "தென்றல் வந்து என்னை தொடும்" சீரியலில் நடித்து வருகிறார். பவித்ராவின் பிறந்தநாளில் அவரது நண்பர்கள் ஷியமந்த கிரண் மற்றும் ரியோராஜ் ஆகியோர் அவருக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
பவித்ரா தனது அபிமான நடிகர் விஜய் சேதுபதியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு நண்பர்கள் பவித்ராவின் கண்ணை கட்டி கூட்டிச் செல்கிறார்கள். விஜய் சேதுபதியை பார்த்ததும் பவித்ரா ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் திகைத்து நின்றார்.
அதன் பிறகு விஜய் சேதுபதி பவித்ராவுக்கு கைகுலுக்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பவித்ரா, மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.