மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்! ஏன்? அவருக்கு என்னாச்சு? ரசிகர்கள் வருத்தம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன்
7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனிலும் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அனல் பறக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல பரிச்சயமான முகங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் எலிமினேஷன் நடைபெற்றது. அனன்யா குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது நடிகரும், எழுத்தாளருமான பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவர் நேற்று கன்பெஷன் ரூமிற்கு சென்று தற்போதுதான் தான் விளையாட்டை நன்கு புரிந்து கொண்டதாகவும், இங்கு மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுகின்றன. என்னால் இனி இங்கு இருக்க முடியாது. நெஞ்சு வலியே வருகிறது என கூறி வீட்டில் இருந்து வெளியே அனுப்புமாறு கேட்டுள்ளார். பிக்பாஸ் அவரை சமாதானம் செய்து யோசித்து நாளை வந்து முடிவை கூறுமாறு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் பவா செல்லதுரை தன்னால் வீட்டில் இருக்க முடியாது என தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில் அவரது உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
Bava Chelladurai walks out of the show.#BiggBossTamil7 pic.twitter.com/FmVG8sdHM4
— Bigg Boss Follower (@BBFollower7) October 9, 2023