#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவரும் இல்லை.. இப்போ இவரும் இல்லை.. பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் மாற்றம்..
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில். இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகி கடந்த 2016 ஆண்டு வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம். நோய்வாய் பட்ட தனது அம்மாவை காப்பற்றுவதற்காக, பணக்கார குடும்பத்தை மகன் பிச்சை எடுப்பதுபோல் அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியாகி அதிக வசூலையும் குவித்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசி வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை எனவும், பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி தான் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப்போகிறார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது அவரும் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும், அவருக்கு பதில் மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து கோடியில் ஒருவன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.