#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித்தின் அடுத்த படத்தில் இவர்தான் கதாநாயகி! வெளியான அதிகாரபூர்வ தகவல்!
தல அஜித்தின் விஸ்வாசம் படம் முடிவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாக மாபெரும் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். படத்தினை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவின் கணவர் போனிகபூர் நடிக்கிறார்.
ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார். அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க உள்ளார் அஜித். மேலும், படத்தில் அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் பற்றி இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை.
நடிகை நஸ்ரியா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார் என கூறியுள்ளார்.
இதுஒருபுறமிருக்க பிங்க் படத்தில் நடித்திருந்த Andrea Tariang மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோரும் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது