96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திக் திக்... பீட்சா-3 'தி மம்மி' பற்றிய சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட படக் குழு... ரசிகர்கள் உற்சாகம்.!
2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் பீட்சா. இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான தீபன் சக்கரவர்த்தி, அசோக் செல்வன் மற்றும் சங்கீதா செட்டி ஆகியோரை வைத்து இயக்கிய பீட்சா 2 என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
இந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக தற்போது பீட்சா 3 தி மம்மி என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் அஸ்வின், பவித்ரா மற்றும் மாரிமுத்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தினை மோகன் கோவிந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.
#Pizza3 : TheMummy In Cinemas July 28 Worldwide
— Rinku Gupta (@RinkuGupta2012) July 23, 2023
A @VSquareEnt release
A @ThirukumaranEnt @icvkumar Production#Pizza3FromJuly28@MohanGovind8 @AshwinKakumanu @gauravnarayanan @Pavithrah_10 #AbiNakshatra @Mohamedkuraish1 @kaaliactor @AnupamaKumarONE @arunrajmusic pic.twitter.com/SYwyMHR7th
இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் படக்குழு தெரிவித்து இருக்கிறது. பீட்சா பாகம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது பாகமும் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.