மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலை மிரட்டல் புகாரில் பாபி சிம்ஹா, கேஜிஎப் நடிகர் மீது வழக்குப்பதிவு.!
கடந்த 2012ம் ஆண்டு "காதலில் சொதப்புவது எப்படி" என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாபி சிம்ஹா. தொடர்ந்து இவர் பீட்ஸா, ஜிகர்தண்டா, நேரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதில் "ஜிகர்தண்டா" படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்நிலையில், கொடைக்கானல், பேத்துப்பாறை பகுதியில் பாபி சிம்ஹா 15 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வருகிறார். கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்பவர் தான் இக்கட்டிடப் பணிகளை கவனித்து வந்தார். பணிகள் முடியும் தருவாயில் ஜமீருக்கும், பாபி சிம்ஹாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஜமீரின் நண்பர் உசேன் சமரசம் பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் கேஜிஎப் வில்லன் நடிகர் ராம் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் சேர்ந்து உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உசேன் கொடுத்த புகாரின் மேல் பாபி சிம்ஹா, ராம் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்