35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
திருட்டு காரிலேயே, போலீசை கடத்திய இளைஞன்! பின் நடந்தது என்ன? சினிமாவையே மிஞ்சிய சம்பவம்!
சட்டிஸ்கர் மாநிலம் சுராஜ்பூரில், ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் விரேந்திர சிங். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு தேடப்படும் குற்றவாளி ஒருவன், திருட்டு வாகனத்தில் வருவதாகவும், அவரை கைது செய்யவேண்டுமெனவும் தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் கார் ஒன்று நின்றுள்ளது. அதனை கண்ட வீரேந்திர சிங் அதன் அருகில் சென்று டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்த டிரைவர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கான்ஸ்டபிள் விரேந்திர சிங் வண்டியின் ஆர்.சி. புக்கை கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் போனில் இருக்கிறது உள்ளே வந்து பாருங்கள் என்று காருக்குள் அழைத்துள்ளார்.
அவரும் நம்பி உள்ளே சென்ற நிலையில் அந்த நபர் சட்டென கதவை மூடி காரை எடுத்து சென்றுள்ளார். இதனை எதிர்பாராத கான்ஸ்டபிள் தன்னை இறக்கி விடச் சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் கேட்கவே இல்லை. இதனால் பதறிப்போன கான்ஸ்டபிள் அம்மாநில அவசர உதவி எண்ணான 112 க்கு அழைத்து தனது நிலைமையை கூறியுள்ளார். ஆனால் எதற்கும் அசராத அந்த நபர் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சென்று விரேந்தர் சிங்கை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து விரேந்தர் சிங்கை மீட்ட சக போலீசார்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தீவிர தேடுதலுக்கு பிறகு அந்த மர்ம நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த நபர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் ட்ரைவின்போது மாருதி ஸ்விஃப்ட் டிசைர் காரை திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.