மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைகைப்புயல் வடிவேலுவை தேடும் போலீசார்! அதிர்ச்சி காரணம்!
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் வடிவேலு. பொதுவாக காமெடி நடிகர்கள் நகைச்சுவை செய்தால் தான் சிரிப்பு வரும். ஆனால் வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தவார் தான் வைகைப்புயல் வடிவேலு.
வைகைப்புயல் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி போன்ற படங்களின் மூலம் நகைச்சுவை நாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் தற்போது பல்வேறு பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் இருந்துவருகிறார்.
வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சதீஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் வடிவேலுவை தேடி வருவதாக கூறப்படுகிறது.