மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது. இந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும். அதேபோல் தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் அயலான் கேப்டன் மில்லர் மிஷன் 1 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சன் டிவியில் லியோ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்களும், விஜய் டிவியில் பரம்பொருள் மற்றும் லக்கி மேன் திரைப்படங்களும், ஜீ தமிழில் மார்க் ஆண்டனி, வீரன் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்களும், கலைஞர் டிவியில் இறைவன் மற்றும் கழுவேர்த்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளது.