மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன்-2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சிறப்பாக ஓடிய நிலையில், 400 கோடியை தாண்டி வசூல் செய்தது.
இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பிற முக்கிய பிரபலங்கள் முக்கிய வேடங்களில்நடித்திருந்தனர்.
படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 இன் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
புதிய அப்டேட் படி, பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படம் 100 நாட்களில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனவே டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாக உருவாகி உள்ளதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.