மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ரா அட்ரா.. பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறு வசூலுடன் தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன்..! வரலாற்று சாதனை படைத்த வீரசோழம்..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவலை தழுவி, உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர்.
இப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் உலகளவில் முதல் நாள் வசூல் மட்டும் சுமார் ரூ.80கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளின் முடிவில் ரூ.150கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.