மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இது புதுசா இருக்கே..." கோடை வெயிலை சமாளிக்க பொன்னியின் செல்வன் நாயகி மொட்டை மாடியில் செய்த காரியத்தைப் பாருங்க.!
ஹிந்தியில் 2016 ஆம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2 .0 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இவர் ஹிந்தி மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நிவின் பாலி நடிப்பில் உருவான மூத்தோன் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார் மணிரத்தினம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரமாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பரதநாட்டியம் போன்ற கிளாசிக்கல் நடனங்களையும் கற்று அறிந்த நடிகை இவர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். தற்போது மொட்டை மாடியில் சேலை கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.