மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. மனதை உருக்கும் பொன்னியின் செல்வனின் "அகநக" பாடல் அசத்தலாக வெளியானது..! அதுக்குள்ள இத்தனை லட்சம் பார்வையாளர்களா?..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.
இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
படம் வெளியாக சிலநாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது பாடல் வெளியாகியுள்ளது.பாடலில் வரும் ஏ.ஆர்.ரகுமானின் இசை அனைவரது உள்ளத்தையும் கவரும் வகையில் இருக்கிறது. எனவே இப்பாடல் பெரிய ஹிட் ஆகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.
மேலும், பொன்னியின் செல்வனின் அகநக பாடல் வெளியாகிய 34 நிமிடத்தில் 2 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இதற்காக சொத்தையே எழுதி வைக்கலாம் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.