மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டுத்தாக்கு.. பொன்னியின் செல்வன் 2-வுக்கு சென்சார் வந்தாச்சு.. படத்தின் நேரம் எவ்ளோ தெரியுமா?..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் நாவலைதழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் காட்சி மற்றும் ஒளிப்பதிவு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படத்தில் இருக்கும் எந்த ஒரு காட்சியையும் நீக்காமல் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடம் ஒளிபரப்பாகிறது என்றும் தணிக்கை குழுவின் தகவல் மூலமாக தெரியவந்துள்ளது. மேலும் தமிழ் ரசிகர்கள் பலரும் இப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.