ஏன் இந்த தரம் தாழ்ந்த மனநிலை மிஸ்டர். ! ஞானவேல் ராஜாவை விமர்சித்த பருத்திவீரன் பட நடிகர்.!



Ponvannan criticiz gnanavelraja

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்பட விழாவிற்கு பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் அமீரை அழைக்காதது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு பேட்டியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் பண மோசடி செய்திருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Paruthiveeran

இயக்குனர் அமீர் பருத்திவீரன் திரைப்படத்திற்காக எந்தளவிற்கு பாடுபட்டார் என்று சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் பேசியிருக்கிறார்கள். அதே போல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான், பருத்திவீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்வண்ணன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விமர்சனம் செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, பருத்திவீரன் திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று பல நண்பர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நான் அறிவேன்.

Paruthiveeran

நானும், சமுத்திரக்கனியும் செலவுகளை சுட்டிக்காட்டி பேசியதெல்லாம் சமாதானப்படுத்திவிட்டு, சமரசம் செய்து கொள்ளாமல் வேலை பார்த்தார். பணத்துக்காக தன்னுடைய படத்திற்கு துரோகம் செய்பவரல்ல அமீர். இதை அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரித்துள்ள படைப்பையும், அதன் படைப்பாளியையும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக வேலை தெரியாதவர், திருடன் என்று கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. அந்த பேட்டி முழுவதும் உங்களுடைய பேச்சு திமிரும், உடல் மொழியும் வக்கிரமாக இருந்தது.தங்களுடைய தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை  அளவுகோலாக வைத்து, இந்த படத்தையும், அதன் படைப்பாளியும் எடை போட்டு விட்டீர்களா? வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை என்று கூறியிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.