ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா ஹெக்டே.. என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் வருத்தம்.?
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து, தமிழில் வேறு பட வாய்ப்பு அமையாததால், பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்திவந்தார்.
இதையடுத்து, விஜயுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்ததன் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக, "குண்டூர்காரம்" படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். திடீரென அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
அடுத்து, பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத்சிங்" படத்தில் நடிக்கவிருந்ததாகவும், அதில் இருந்தும் விலகி விட்டதாகவும், கூறப்பட்டது. இந்நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு "ராதே ஷியாம்" படத்தில் நடித்த போது கால்வலி ஏற்பட்டதாகவும், அதற்கு அறுவைசிகிச்சை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தொடர்ந்து அவரது காலில் வலி இருப்பதால், மீண்டும் பூஜா ஹெக்டே காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதனால் தான் படங்களில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பூஜா ஹெக்டே எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.