மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
விஜய்யின் GOAT திரைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான GOAT திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த திரைப்படத்தில் வைபவ், பிரேம்ஜி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
விஜய்யின் கடைசி திரைப்படம்
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் கடைசி திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை KVN ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இபடத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
விஜய்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் ஒன்று வெளியாகி வருகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் கோட் படத்தை பார்க்க, 'ஆடு'டன் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்; ரசிகர்கள் உற்சாகம்.!