#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. பீஸ்ட் நாயகிக்கு கூடும் மவுசு! அந்த விஷயத்துல நயன்தாராவையே பீட் செய்துவிடுவார் போல!!
தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்
ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் அவருக்கு தமிழில் பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார்.
பின் பூஜா ஹெக்டே தெலுங்கு, கன்னடம் , இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். பின்னர் அவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார். அவர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
தொடர்ந்து பூஜா ஹெக்டா இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜன கன மன படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அப்படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. மேலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு சம்பளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்திற்காக அவருக்கு 5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலேயே நயன்தாராதான் 4 முதல் 7கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே நயன்தாராவை பீட் செய்துவிடுவார் போல என கூறப்படுகிறது.