ஆண்கள் காபி குடிக்க அழைத்தால் உஷார்.. நடிகை பூனம் பாஜ்வா அட்வைஸ்.!



Poonam Bhajwa coffee advice video viral

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாஜ்வா. பிரபல நடிகையாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை ஏறி, பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

ஆனாலும் தனது கவர்ச்சியான நடிப்பால் ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ரசிகர்களை கவர தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை பூனம் பாஜ்வா ஆண்கள் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "பொதுவாகவே ஆண்கள் காபி கொடுக்க போலாமா என்று வெகுளித்தனமாக கேட்பார்கள். ஆனால் அதில் இருக்கும் உண்மை எனக்குத் தெரியும். ஆனால் இதை ஆண்கள் அழகாக கூறுவார்கள். காபிக்காக அவர்கள் அழைப்பதில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. எனவே ஜாக்கிரதை". என பேசியுள்ளார்.

தற்போது இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றன. அதன்படி சிலர் இதுவரை நீங்கள் எத்தனை காபி குடிச்சுருக்கீங்க என குண்டக்க மண்டக்க கேள்வி எழுப்புகின்றனர்.