மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணிவா சொன்னா ஏத்துக்கலாம்; துணிவா நின்னா வா பாத்துக்கலாம்!!..: அஜீத்குமாரை வம்புக்கிழுத்த விஜய் ரசிகர்கள்..!
மதுரையில் நடிகர்களின் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் அடிக்கடி பரபரப்பாக பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழும் வள்ளுவரே என்ற வாசகத்துடன் ரஜினியை வள்ளுவராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜீத்குமார் நடித்துள்ள துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அவர்களது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
அஜீத்குமாரின் துணிவு படத்தின் வினியோக உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது. இதன் காரணமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ தமிழ் திரையுலகில் விஜய் நம்பர் 1 நடிகர் என்றும், வாரிசு படத்தை திரையிட அதிக அளவில் திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும், இது குறித்து உதயநிதியை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வாரிசு படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சைய எழுப்பும் வகையில் உள்ளது. அதில் பணிவா சொன்னா ஏத்துக்கலாம். துணிவா நின்னா வா பாத்துக்கலாம் என்று அஜீத்குமாரின் துணிவு படத்தை குறிவைத்து வாசகங்களை அச்சிட்டுள்ளனர். இது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.