பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு! ஏன்? அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா??
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சசிகலா விடுதலை பெற்று சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து அவரை அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அதாவது அண்மையில் சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மேலும் அவர்கள் மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்ததாக தெரிவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நேற்று நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அவரிடம், சுதாகர் அபராத தொகையை செலுத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய போது, அவர் சுதாகரனுக்கு தண்டனை காலம் முடியவில்லை. இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரபு, சசிகலாவின் உடல்நலம் குறித்து அறியவே அவரை சந்தித்தேன் அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரர் ராம்குமார் பாஜகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்களை கூறிய அவர் நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.