பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கொழுகொழுவென இருக்கும் நடிகர் பிரபுவா இது.! தூக்கி வச்சிருப்பது யார் பார்த்தீர்களா!! வைரலாகும் பொக்கிஷ புகைப்படம் !!
தமிழ்சினிமாவில் முன்னொரு காலத்தில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரபு. இவர் சின்னத்தம்பி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானார் மேலும் தனது நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த கொழுகொழுவென இருந்த பிரபுவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்தது. பிரபு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இளைய திலகம் பிரபு, நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ஆவார். கும்கி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விக்ரம் பிரபு இவருக்கு மகனாவார்.அவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய துணைகதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது சிறுவயது பொக்கிஷமான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தில் பிரபுவை அவரது தந்தையான சிவாஜி கணேசன் தூக்கி வைத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்து புகைபடத்தை பகிர்ந்து வருகின்றனர்.