கேப்டன் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு இந்த மாதிரி பண்ணிட்டாங்க" பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..



Premalatha vijayakandh latest interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " கேப்டனுக்கு யாரிடமும் வாங்கிப் பழக்கமில்லை. அவருக்குக் கொடுத்து தான் பழக்கம். 

Vijayakandh

நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது எங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் "சொத்தை விற்று ஏன் கட்சி ஆரம்பிக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நான் " இது கேப்டன் சம்பாதித்த சொத்து. அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். 

அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் சொல்வதை தான் நான் செய்வேன். மேலும் நாங்கள் கேப்டனின் உழைப்பில் சேர்த்த பணத்தில் தான் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தைக் கட்டினோம். ஆனால் ஒரு பாலத்துக்காக அந்த மண்டபத்தை இடித்துவிட்டனர்.

Vijayakandh

இப்போது அங்கு எத்தனை வண்டிகள் அதில் போகிறது? கேப்டன் அரசியலுக்கு வரக்கூடாது என்று தான் எங்கள் மண்டபத்தை இடித்தார்கள். இன்று அதன் மதிப்பு கிட்டத்தட்ட 100கோடி. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் அசராமல் தான் கட்சியை துவங்கினோம்" என்று கூறினார்.