மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவரா! தீனா படத்தில் அஜித்தை கலாய்த்து அடி வாங்கிய பிரபல ஹிட்பட இயக்குனர்! யார்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது தலயாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தல அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
அவ்வாறு தற்போதும் பெருமளவில் ரசிக்கபட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றுதான் தீனா. இத்திரைப்படத்தின் மூலம்தான் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் தல என்று ரசிகர்களால் புகழப்பட்டார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் தல அஜித் வேற லெவலில் கலக்கியிருப்பார். தீனா படத்தில் மால் ஒன்றில் நடிகை லைலாவை கும்பல் ஒன்று கேலி செய்வர். பின்னர் அஜித் அந்த கும்பலிடம் சண்டைபோடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.
அந்த சண்டைக் காட்சியில் அடிவாங்கும் குரூப்பில் பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் இருப்பார். அவர் தமிழில் நேரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் பல மொழிகளிலும் பெருமளவில் ஹிட்டான பிரேமம் படத்தையும் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கிய ஆவார் தற்போது முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.