மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் குறித்து நடிகர் பிரேம்ஜி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி சிறந்த நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கிவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிரேம்ஜி எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார். மேலும் அவர் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பார். பிரேம்ஜி தற்போது அவரது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாதநிலையில் பிரேம்ஜிக்கு அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக பெண் தேடிவந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். நான் நிம்மதியா, ஜாலியா இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக இருப்பதுதான் மகிழ்ச்சி. மத்தவங்களுக்காக வாழ விரும்பவில்லை. கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினாங்க ஆனா, முடியவே முடியாதுனு சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார்.