மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவா.. அட்ரஸ் வேணுமா? திடீரென சிம்புவை கலாய்த்த பிரேம்ஜி! அதுவும் ஏன்? எதனால் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சிம்பு நடிப்பில் தற்போது வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மாநாடு திரைப்படம் கடந்த மாதம் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் அடித்தது. மாநாடு திரைப்படம் சிம்புவின் தற்போதைய திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாகவும், மைல் கல்லாகவும் அமைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
My dear thalaiva @SilambarasanTR_ shall I send my brother @vp_offl house address ? 😬😬😬🙏🙏🙏 pic.twitter.com/JuKAFgumMG
— PREMGI (@Premgiamaren) December 10, 2021
அதாவது அண்ணாத்த படம் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிவா வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினி அவருக்கு தங்கச்செயின் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அந்த செய்தியை பகிர்ந்த பிரேம்ஜி சிம்புவை டேக் செய்து, தலைவா சிலம்பரசன், எங்க அண்ணன் வெங்கட்பிரபு வீட்டு அட்ரஸ் வேணுமா? சொல்லுங்க? எனக் கேட்டுள்ளார். இதற்கு எஸ்.ஜே. சூர்யா மற்றும் வெங்கட்பிரபு இருவரும் சிரிக்கும் எமோஜியை கமெண்டாக பதிவிட்டுள்ளனர்.