மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடி கோடியை பணம் கொடுத்தாலும் அதில் மட்டும் நடிக்கவே மாட்டேன்! நடிகை பிரியா ஆனந்தின் அதிரடி பேச்சு!
ஜெய் நடிப்பில் வெளியான "வாமணன்" திரைப்படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மீண்டும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் எவ்வளவு கோடி கோடியாய் பணம் கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர் தென்னிந்திய பெண்களின் டஸ்கி கலர் மற்றும் அவர்கள் கண்ணில் இருக்கும் ஸ்பார்க் வேறு எங்கும் கிடையாது.
மேலும் அவர் ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் வேற்று மாநில பெண்களை கூட்டிவந்து அவர்களின் கலரை குறைக்க மேக்கப் பொட்டு அதன் பிறகு இந்த க்ரீம் போட்டால் தான் வெள்ளையாக முடியும் என்று கூறுவது நியாயமில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார்.