மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஹீரோவாகும் பிரசாந்த்! ஜோடியாக போவது யார் பார்த்தீர்களா! வெளியான சூப்பர் தகவல்!!
பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்த திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படம் தற்போது அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை ஸ்டார் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார்.
இதில் ஆயுஷ்மன் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, லீலா சாம்சன், மனோபாலா, வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியில் அந்தாதூன் படத்தில் தபு வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.