மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதுக்கு என்ன பண்ணனும்.. ஆசையாக கேட்ட ரசிகர்! செம நேக்காக பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலை பார்த்தீர்களா!!
சீரியல் பின் சினிமா என கலக்கிவரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். சீரியல் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்கள் அவரது கைவசம் உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பார்.
இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர் அவரிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு நடிகை பிரியா பவானி சங்கர், புதிதாக வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சிக்கலான நபர். எனவே, அதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. பாதுகாப்பானது என்று கூறியுள்ளார்.